எலுமிச்சை
எலுமிச்சை, சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டுமின்றி, பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை போக்குவதிலும் சிறந்தது. அதற்கு எலுமிச்சை துண்டை, பாத்திரங்களில் உள்ள கறைகளின் மீது தேய்த்தால், கறைகள் நீங்குவதோடு, பாத்திரம் மணத்துடன் இருக்கும்
உப்பு
உப்பு உணவிற்கு சுவையைக் கொடுக்கும் உப்பைக் கொண்டும் வீட்டை சுத்தப்படுத்தலாம். அதிலும் பாத்திரங்களில் உள்ள துருக்களை சுத்தப்படுத்த உப்பு பெரிதும் உதவியாக உள்ளது
காட்டன் பட்ஸ்
தற்போது அனைவரது வீட்டிலும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் இருக்கிறது. அத்தகைய சாதனங்களில் உள்ள கீ போர்ட்டை சுத்தப்படுத்துவதற்கு, பிரஷ் அல்லது வேறு ஏதாவது கடினமான பொருட்களை உபயோகிக்கக்கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் பட்ஸ் இருந்தால், அதனைக் கொண்டு சுத்தப்படுத்தலாம்.
வினிகர்
ஃபர்னிச்சர்களில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால், அதனைப் போக்குவதற்கு வினிகரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஃபர்னிச்சர்களின் மீது தேய்த்தால், கறைகள் நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பாத்திரம் கழுவும் தொட்டியில் ஊற்றினால், அங்கு ஏற்பட்ட அடைப்பை எளிதில் போக்கலாம்.
கதவுகளில் உள்ள அழுக்குகளை போக்க, பேக்கிங் சோடாவை, வினிகருடன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு துடைத்தால், எளிதில் கறைகள் போய்விடும்
No comments:
Post a Comment