கொத்தமல்லி சாதம்


தேவையான பொருட்கள் 

  • பாஸ்மதி அரிசி - ஒரு கப்,  உருளைக்கிழங்கு - 2
  • வெங்காயம் - ஒன்று,  எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய் பால் - அரை கப்,  உப்பு
  • கரம் மசாலா - 2 சிட்டிகை,  மஞ்சள் தூள் - சிறிது
  • சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
  • பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை, பிரியாணி இலை - தாளிக்க       
  • அரைக்க:
  • பச்சை மிளகாய் - 2,  மல்லித் தழை - ஒரு பெரிய கைப்பிடி,  மிளகு - அரை தேக்கரண்டி,  சீரகம் - அரை தேக்கரண்டி,  முந்திரி - 6,  தேங்காய் - 2 விரல் அளவு, பட்டை, லவங்கம்

  • செய்முறை      
  • அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைக்கவும். அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
  • அரைத்த மசாலா மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.
  • பின் தேங்காய் பால் ஊற்றி மீதத்திற்கு நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்
  • நன்றாக கொதிக்க துவங்கியதும் அரிசி சேர்த்து கலந்து விடவும். மீண்டும் கொதிக்க துவங்கியதும் மூடி சிறு தீயில் வைத்து வேக விடவும்.
  • முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான கொத்தமல்லி பிரியாணி தயார். ரைத்தாவுடன் பரிமாறலாம் 

                No comments:

                Post a Comment