அவல் பீட்ரூட் சாலட்
தேவையான பொருட்கள்
அவல் : 1/4 கப் , (மெல்லிய அவல்), பீட்ரூட்: 1 (சிறியது ),
தேங்காய் துருவல் : 3 ஸ்பூன், நாட்டுசர்க்கரை : 3 ஸ்பூன்
உப்பு சிறிதளவு .
செய்முறை:
முதலில் அவலை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதனுடன் பீட்ருட்டை துருவி சேர்த்து கரண்டியால் கிளறவும்.அதனுடன் துருவிய தேங்காய், நாட்டுசர்க்கரை, உப்பு சிறிது சேர்த்து கிளறவும். அவல் பீட்ரூட் சாலட் தயார்.
நாட்டுசர்க்கரைக்குப் பதிலாக குண்டு வெல்லம், பணங்கருப்பட்டி பயன்படுத்தலாம்.
- இரத்தசோகை உள்ளவர்கள் தினசரி பீட்ரூட் சாப்பிட்டலாம்.
- கர்ப்பிணிகள் தினசரி பீட்ரூட் சாப்பிட்டால் இரத்தசோகை வராமல் இருக்கும்.
No comments:
Post a Comment