பல வகைசூப் (10)


தக்காளி சூப்

                                                                                    

                                                                                   தேவையானவை: 


தக்காளி - கால் கிலோ, 
பெரிய வெங்காயம் - 2, 
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், 
உப்பு, மிளகுத்தூள், பால், 
நறுக்கிய கொத்தமல்லி தழை





செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி... அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி... உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.




பப்பாளி இஞ்சி சூப்



தேவையானவை:

பப்பாளி பழம்- சிறியது (பாதி),
 இஞ்சி - ஒரு சிறிய துண்டு, 
வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), 
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப், மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, 
நறுக்கிய கொத்தமல்லி தழை,
 கிரீம் - சிறிதளவு. 
உப்பு - தேவையான அளவு.




செய்முறை:
 கடாயில் எண்ணெயை சூடாக்கி... வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... சூப் கப்பில் ஊற்றவும். அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.


முளைகட்டிய நவதானிய சூப்

தேவையானவை: 

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப், 
வெங்காயம் - ஒன்று, 
பூண்டு - 2 பல், 
சீரகம் - ஒரு டீஸ்பூன், 
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், 
மிளகு - காரத்துக்கேற்ப,
 கொத்தமல்லி தழை - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், 
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,
 உப்பு - தேவையான அளவு.



செய்முறை: 
முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


பருப்பு சூப்
தேவையானவை: 

வேக வைத்த பருப்பு - ஒரு கப், 
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, 
பூண்டு - 2 பல், 
சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, பிரெட் ஸ்லைஸ் - 2 ( 'கட்’ செய்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்),
 பனீர் - 50 கிராம் (எண்ணெய் பொரித்தெடுக்கவும்), உப்பு - தேவையான அளவு.







செய்முறை:
 கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் பதத்துக்கு வந்தவுடன் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறும்போது நறுக்கிய கொத்த மல்லி தழை, பொரித்த பனீர், வறுத்த பிரெட் சேர்க்கவும்.


பட்டாணி சூப்


தேவையானவை: 

பச்சைப் பட்டாணி - கால் கிலோ,
 வெங்காயம் - ஒன்று,
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
 சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், 
உப்பு,     மிளகுத்தூள், 
காய்கறி வேக வைத்த தண்ணீர், 
கிரீம், 
பால் - தேவையான அளவு.


செய்முறை:
 ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து, சோள மாவை பாலில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், கரம்மசலாத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, சூப் கப்பில் ஊற்றி, மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.


காய்கறிகளின் தோல், காம்பு, தண்டுசூப்


தேவையானவை:
காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), 
பேரிக்காய் தோல் - தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
பூண்டு - 2 பல், 
நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, 
வொயிட் சாஸ் - 3 டேபிள்ஸ்பூன், 
நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு,
 உப்பு, 
மிளகுத்தூள் - தேவையான அளவு.



செய்முறை:
 கடாயில் வெண்ணெயை விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயதாள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய காய்கறி தோல், தண்டு, இலை, பேரிக்காய் தோல்களை கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வொயிட் சாஸ், உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி... கொத்தமல்லி தழை தூவி 
பரிமாறவும்.


ஸ்வீட் கார்ன் சூப்

தேவையானவை:

காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
 நறுக்கிய கேரட் - 2 டீஸ்பூன், 
கோஸ் - 50 கிராம், 
உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 3 டேபிள்ஸ்பூன், 
பீன்ஸ் - தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), 
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், 
வினிகர் - அரை டீஸ்பூன், 
அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு, 
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:
கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், பாதி வெந்தவுடன்... உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும்போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.



வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்


தேவையானவை: 

நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), 
நூடுல்ஸ் - தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப், வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, பூண்டு - ஒரு பல், வெங்காயத்தாள் - ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, வெண்ணெய், 
சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
 சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 
கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி... கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.




பீட்ரூட் சூப்

தேவையானவை: 

பீட்ரூட் துருவல் - ஒரு கப் , 
கேரட் துருவல் - அரை கப் , 
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு.



செய்முறை:
 காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டி... உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.



காய்கறி சூப்




தேவையான பொருள்கள்:

கோஸ் – 50 ‌கிரா‌ம்
பீன்ஸ் – 50 ‌கிரா‌ம்
கேரட் – 50 ‌கிரா‌ம்
சோளமாவு – 3 தே‌க்கர‌ண்டி
உப்பு – தேவையான அளவு 
வெண்ணெய் – ஒரு தே‌க்கர‌ண்டி 
பட்டை லவுங்கம் - ‌சி‌றிதளவு 
பிரியாணி இலை – ‌சி‌றிதளவு 
மிளகு தூள் – 2 தே‌க்கர‌ண்டி 
வெங்காயம் - 1 
தக்காளி - 1
கொத்தமல்லி 

செய்முறை:
வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம், பிரியாணி இலை, வெங்காயம் போட்டு, பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.   வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் காய்கறிகளை ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக சேர்த்து லேசாக வத‌க்கவு‌ம்.  பி‌ன்ன‌ர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேகவை‌க்கவு‌ம்.காய்கறிகள் வெந்ததும் மூன்று தே‌க்கர‌ண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து வேகு‌ம் கா‌ய்க‌றி‌‌யி‌ல் ஊற்றி கொதிக்க விடவும். சூ‌ப் பத‌த்‌தி‌ற்கு வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.சுவையான காய்கறி சூப் தயா‌ர்.



No comments:

Post a Comment