![]() |
ஆரஞ்சிப்பழம் |
- ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன.
- மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
- இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.
- பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.
ஓர் ஆரஞ்சிப்பழத்தில் 170 வகையான நுண்சத்துக்களும் (Nutriants ) 60 க்கும் மேற்பட்ட பிளவனாய்டுகளும் உள்ளன. இவை வலிக்கு நிவாரணமாகவும் புற்று எதிர்பொருளாகவும் குருதி உறைதலைத் தவிர்க்க உதவுவதாகவும் தெரியவந்துள்ளது. இது மேலும் சிறந்த எதிர் ஆக்சிடன்றாகவும் உள்ளது .
No comments:
Post a Comment