தேவையான பொருட்கள்
- சோயா (மீல் மேக்கர்) உருண்டைகள் - 100 கிராம்
- கடலை மாவு - ஒரு தேக்கரண்டி, மைதா - ஒரு தேக்கரண்டி
- கார்ன் ஃப்ளார்- ஒரு தேக்கரண்டி, மிளகாய் தூள்-ஒரு தேக்கரண்டி,
- குடை மிளகாய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று
- இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 3
- சிவப்பு கலர் பொடி - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லிதழை - சிறிதளவு
- செய்முறை
- வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பாதி அளவு நீரை ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் சோயாவைப் போட்டு 2 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு அதை குளிர்ந்த நீரில் 2 முறை அலசிவிட்டு தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், உப்பு, கலர் பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை வேகவைத்து எடுத்த சோயா மீது தூவி சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறி வைக்கவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் சோயாவை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இதேபோல் மீதமுள்ள சோயாவையும் பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- அனைத்தும் நன்கு சுருள வதங்கியதும் பொரித்த சோயா உருண்டைகளை சேர்த்து கிளறிவிடவும்.
- பிறகு கார்ன் ஃப்ளாருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து, சோயா கலவை மீது ஊற்றி கிளறிவிட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும்.
- கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment