Monday, 5 August 2013

கம்பு பயன்படுத்தி சமையல்


""நம் உடலின் எடையை குறைக்க கம்பை சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் எனில் க்ளைசிமிக் இன்டெக்ஸ் விகிதப்படி கம்பில் லோ க்ளைசிமிக் அளவு உள்ளது எடை குறைக்க நினைப்பவர்களுக்கு கம்பு வரப்பிரசாதம்"".

""கம்பில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம் நிறைந்து உள்ளது. கம்பை உணவில் சேர்ப்பதால் ரத்த கொதிப்பு, நீரழிவு, புற்று நோய் ஆகியவற்றை பெருமளவில் குறைக்கலாம்"".

கம்பு பொங்கல் 


கம்பு - 1/2 கிலோ
பாசிபருப்பு 100 கிராம் 
மிளகு ,  சீரகம், உப்பு தேவையான அளவு 
இஞ்சி துருவியது சிறிது 
நெய் சிறிதளவு 
காய்ந்த மிளகாய் 2



செய்முறை 
  • கம்பை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
  • உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
  • புடைத்த கம்பை மிக்ஸியில் போட்டு, குருணையும் மாவுமாக இருப்பது போல் அரைத்து எடுக்கவும்.
  • பாசிப்பருப்பை ஊற வைக்கவும் 
  • குக்கரில் நெய்விட்டு மிளகு ,  சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து துருவிய இஞ்சி சேர்த்து வதக்கி கம்பு மற்றும் பாசிப்பயறு சேர்த்து 1 டமளர் கம்புக்கு  2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சிறிது சேர்த்து குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
  • சுவையான கம்பு பொங்கல் தயார் .


கம்பு அடை

கம்பு - 1 கப்,
பச்சரிசி - 1/2 கப்,
துவரம் பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
உளுத்தம் பருப்பு - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 8,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை 

அரிசி, கம்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தனித்தனியாக கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, கனமான அடைகளாக தட்டி, நடுவில் ஓட்டை போடவும்.
நடுவிலும் சுற்றிலும் லேசாக எண்ணெய் விட்டு, திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் [சிம்மில்] வைக்க வேண்டும்).

இனிப்பு கம்பு அடை



கம்பு மாவு - ஒரு கப்
வெல்லம் (துருவியது) - 1/2 ல் ‍இருந்து 3/4 கப் வ‌ரை
தேங்காய் துண்டுகள் -‍ 1/3 கப்
ஏலக்காய் - 2
உப்பு ‍ - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்/நெய் -‍ 2 மேசைக்கரண்டி



செய்முறை 

  • வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, கரைத்துக்கொண்டு அதனுடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய்த்தூள், சிட்டிகை உப்பு, தேங்காய்த்துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த இந்த மாவை ஒரு ஈரத்துணியால் மூடி, அரை மணி நேரம் விடவும். அதன்பிறகு, மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • பின்னர், ஒவ்வொரு உருண்டையையும் உள்ளங்கையிலேயோ (அல்லது) எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரிலோ மெல்லிதாக தட்டி நான்கு, ஐந்தாக தவாவில் போட்டு, சுற்றிலும் சிறிது நெய்/நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும், அடைகளை மெதுவாக‌ திருப்பிவிட்டு மேலும் ஒரு சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
  • மாலை நேர‌த்தில் சாப்பிட‌, சுவையான‌, அதே ச‌ம‌ய‌ம் ஆரோக்கிய‌மான‌ ஒரு ஐட்ட‌மாக‌ இருக்கும் இந்த இனிப்பு‌ கம்பு அடை.


கம்பு இட்லி, தோசை

கம்பு - ஒரு கப்
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கைப்பிடி
வெந்தயம் - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப





செய்முறை 
  •  உப்பு தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு வெட் கிரைண்டேரில் ஊற வைத்தவற்றை போட்டு அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
  • புளிக்க வைத்த மாவை மறுநாள் இட்லி தட்டில் ஊற்றி பானையில் வைத்து வேக வைக்கவும்.
  • நன்கு வேக வைத்து இறக்கவும். சுவையான, எளிதாக செய்யக்கூடிய கம்பு இட்லி ரெடி.


  • இதே மாவைக் கொண்டு தோசையும் வார்க்கலாம். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி காய வைத்து முதல் நாள் அரைத்து வைத்த மாவை எடுத்து தோசையாக வார்க்கவும்.
  • இருபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையான கம்பு தோசை தயார்.


கம்பு உப்புமா

கம்பு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுத் துண்டு
உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
நெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏறப
கொத்தமல்லி - சிறிது

செய்முறை 

  • வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கம்பை வடிகட்டியில் போட்டு சிறிது நீர் விட்டு அலசி எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • நீர் பாதியாக குறைந்ததும் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.
  • கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சத்தான கம்பு உப்புமா ரெடி.


கம்பு புட்டு
கம்பு - 1/4 லிட்டர்,
சர்க்கரை - 1/2 டம்ளர்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் - 5,
உப்பு - சிறிது,
நெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை 

  • கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு, ஓட்டினால் தோல் வந்துவிடும்.
  • நன்றாக புடைத்துவிட்டு, வாசம் வரும்வரை வறுக்கவும்.
  • வறுத்த கம்பை புட்டுக்கு போல் மாவாக்கி கொள்ளவும். உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, கம்புமாவில் தெளித்து பிசறவும்.
  • கையில் கொழுக்கட்டையாக பிடித்தால், நிற்கும் அளவுக்கு தண்ணீர் தெளித்தால் போதும். தேங்காயை துருவி வைக்கவும்.
  • கம்புமாவை ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்கவும். சூடாக இருக்கும் போதே, சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காயை பொடி செய்து, தூவி கலந்து வைக்கவும்.

கம்பு ரொட்டி
தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: காலை நேர டிபனுக்கு உகந்தது. அதிக நேரம் பசி தாங்கும் என்பதால் நொறுக்ஸ் சாப்பிடும் எண்ணம் தோன்றாது.


கம்பு சோறு


கம்பு - 1/2 கிலோ.

செய்முறை 

  • கம்பை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
  • உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
  • புடைத்த கம்பை மிக்ஸியில் போட்டு, குருணையும் மாவுமாக இருப்பது போல் அரைத்து எடுக்கவும்.
  • அரைத்த மாவை அளந்து கொண்டு, 1 டம்ளருக்கு 2 டம்ளர் தண்ணீர் அளந்து கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதிக்கும் போது, அடுப்பில் இருந்து இறக்கி, அரைத்த கம்பை போட்டு, நன்கு கிளறி, குக்கரில் வைத்து, வெயிட் போட்டு, 3 விசில் வந்த பிறகு, 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
  • அப்படியே சூடாகவும் வைத்து கொள்ளலாம்.
  • கரைத்து குடிக்க வேண்டுமெனில், ஒரு கரண்டியை தண்ணீரில் நனைத்து சாதத்தை எடுத்து கைகளில் போட்டால், ஒரு உருண்டை வரும். அதை நன்றாக கைகளில் அழுத்திப் பிடித்து, உருண்டையாக்கி, தண்ணீரில் போடவும்.
  • உருண்டை சூடு குறைந்தவுடன், வேறு தண்ணீரில் எடுத்து போடவும்.
  • உருண்டைகள் 3, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும். ஃப்ரிஜில் வைப்பதானால், தண்ணீர் மாற்ற வேண்டியதில்லை. வெங்காயத்தை பொடி துண்டுகளாக நறுக்கி தூவலாம்.


கம்பங்கூழ்


கம்பு
நொய்யரிசி - 1 பிடி
உப்பு
தயிர்

செய்முறை 

  • கம்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து வைக்கவும். [பச்சரிசி மாவு பொடிப்பது போல்]
  • இதை தண்ணீர் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.
  • ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்.
  • அடுத்த நாள் நொய்யரிசியை பொங்கவும், இத்துடன் கரைத்த மாவு கலவை கலந்து தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  • மறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.
  • கூழுடன் சாப்பிட சின்ன வெங்காயம், மோர் மிளகாய் வறுத்தது அல்லது மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்து வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும். கூழ் உடம்புக்கு நல்லது, கம்பில் இரும்புச்சத்து அதிகம் உண்டு.


கொழுக்கட்டை
கம்பு - 1/2 கிலோ
பனங்கருப்பட்டி - 1/2 கிலோ
தேங்காய் (பெரியது) - 1
ஏலத்தூள் - 1/2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

  • கம்பை  நன்கு கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து அரவை மிஷினில் கொடுத்து மாவாக்கவும்.
  • தேங்காயை சன்னமாகத் துருவிக்கொள்ளவும்.
  • கருப்பட்டியை மூழ்கும் அளவு நீர் ஊற்றி பாகு காய்ச்சவும். முதல் நிலை பாகுப்பதம் வந்ததும், அனைத்துப் பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்
  • கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்கு கெட்டியாக வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  • இதை முதல் நாள் இரவே தயார் செய்து மறுநாள் காலை கொழுக்கட்டை செய்தால்தான் ஷாஃப்டாக வரும்.
  • சிறு, சிறு கொழுகட்டைகளாக பிடித்து ஆவியில் நீண்ட நேரம் வேகச் செய்யவும்.
  • மற்ற கொழுக்கட்டையைவிட இது வேகுவதற்கு நேரம் எடுக்கும்.
  • மிகவும் டிரெடிஷனல் ஆன இது


No comments:

Post a Comment