1. தலைமுடி
1. இளநரை மறைய
சிலருக்கு மாணவப் பருவத்திலேயே இளநரை தோன்றும். அதை தடுக்க சில குறிப்புகள்:
கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும்.
இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.
இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும்.
வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.
**************************************************************************************************
2. முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
******************************************************************************************
3. வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
******************************************************************************************
4. இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
******************************************************************************************
5. முடி கருப்பாக
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
******************************************************************************************
6. தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
******************************************************************************************
7. செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
******************************************************************************************
8. தலைமுடி வலுப்பட எண்ணெய்
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் அளவு சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைத்து வர வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் அதை வெள்ளைத் துணியில், வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு தொல்லையும் நீங்கும்.
******************************************************************************************
9. முடி பட்டு போல் மிருதுவாக
- முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இதை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.
- பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.
- அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.
- செம்பட்டை முடியை போக்கவும் கசகசா உதவும்.
******************************************************************************************
10. முடி உதிர்வது நிற்க
*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கும்
******************************************************************************************
தலை முடியின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கும் சக்தி ஆரஞ்சு தோல் தோலுக்கு உண்டு. உலர்ந்த ஆரஞ்சு தோலுன், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா 250 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால். முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இந்த பவுடரை உடம்புக்கும் தேய்த்து குளிக்கலாம்,வாசனை பவுடராகவும் இதை பயன்படுத்தலாம்.
கூந்தலுக்கு எப்பொழுதும் இறுக்கமாக "க்ளிப்" போடக்கூடாது.இவ்வாறு செய்தால் முடி உடைந்து போகும்.
வாரம் ஒரு முறை கண்டிப்பாக ஆயில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் உதிராமல் நன்கு வளரும்.ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
******************************************************************************************
காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் - அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
******************************************************************************************
13. வெந்தயம்
அதிகம் வெப்பமான இடத்தில் பணிபுரியும் பெண்கள், வெந்தயத்தை ஊற வைத்து அதனுடன் 5 செம்பருத்தி பூக்களை சேர்த்து அரைத்து, அந்த விழுதை தலையில் தடவி ஊற வைத்துக் குளித்தால் உடல் குளிர்ச்சி ஏற்படும். முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம் மட்டுமல்ல வெந்தயக் கீரையும் உடல் சூட்டைக் குறைக்கும்.
======================================================================
2 .முகம்
1. முகம் பளபளப்பாக
- உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வரலாம்.
- முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ (பன்னீர் ரோஜா)இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் பளபளப்பாக மாறுவதை காணலாம். இயற்கை அழகு குறிப்புகள்
- கரும்புள்ளிகள் உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் சிறிது தயிர் சேர்த்து தடவி வர வேண்டும். பின் அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்த பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நாளடைவில் மறையும்.
- கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினமும் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவி வந்தால் வெயிலினால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
- வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், சந்தனப்பொடி ஒரு ஸ்பூன், கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்து மூன்றையும் நன்கு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக மாறுவதை பார்க்கலாம்.
2. மஞ்சள் தரும் மங்களகரமான அழுகு
- மஞ்சள் மற்றும் பாசிப்பயறு மாவை கலந்து தினமும் குளிக்கும் போது உடலில் பூசிக் குளித்தால் சரும பாதிப்புகள் போகும்.
- உடலில் அதிகப்படியான முடி இருப்பவர்கள், மஞ்சளையும், குப்பைமேனி இலையையும் அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்து வந்தால் விரைவில் முடிகள் உதிரும்.
- கழுத்து மற்றும் கணுக்கால்களில் உள்ள கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வர வேண்டும்.
- மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிப்பது நிற்கும்.
- வறண்ட சருமம் கொண்டவர்கள் மஞ்சளை குறைவாகவேப் பயன்படுத்த வேண்டும்.
- எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மஞ்சள் தூளை அரைத்துப் பூசி வந்தால் பரு வருவது குறையும்.
- மஞ்சள் பூசப் பிடிக்காதவர்கள், மஞ்சள் கலந்த நீரை சூடு படுத்தி அதன் நீராவியை முகத்தில் காட்டினால் போதும் அழகு மிளிரும்.
3. முகப்பருக்கள் மறைய, முகக் கருமை நீங்க
- காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது சருமப் பொலிவிற்கும், முக வசீகரத்திற்கும் ஏற்றது என்று சமீபத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்பவர்கள் பொன்னிற மேனியை பெறுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- உணவுப்பழக்கத்திற்கும், மேனி எழிலுக்கும் உள்ள தொடர்ப்பு குறித்து இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது,
- அன்றாட உணவில் கேரட், தக்காளி போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்வது கரோட்டினாய்டு லெவலை அதிகரித்து மேனியை பொலிவுறச் செய்வதாகவும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் இயான் ஸ்டீபன் கூறியுள்ளார்.
- கசகசாவிற்கு எண்ணெய் பசைத் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்தினர் பயன்படுத்தலாம்.
- உதடு கருமையாக இருப்பவர்கள், கசகசாப் பாலை உதட்டின் மீது தடவி வர, உதட்டிற்கு நல்ல நிறம் கிடைக்கும். செம்பட்டை முடியை போக்கவும் கசகசா உதவும்.
- சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் கார்போக அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.
- முகத்தில் வெயிலில் அலைந்ததால் ஏற்பட்ட கருமையைப் போக்கி பளிச்சென்று ஆக்குவதற்கு கசகசாவிற்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
- கசகசாவிற்கு எண்ணெய் பசைத் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்தினர் பயன்படுத்தலாம்.
- முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப்பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும். - இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கும்.
- முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
- உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படி யாக மறைய ஆரம்பிக்கும்.
- தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
- ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.
- பப்பாளிப்பழம், எலுமிஸ்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
- ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
- வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.
- தர்பூசினி பழ்ச்சாறு, பயத்தம்மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.
- தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும். கைகள் மிருதுவாக இருக்கும்.
- இப்படி தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் நம் அழகுக்காக ஒதிக்கிவைத்தால், வயதனாலும் இளமையாக இருக்கலாம்.
- சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் "மங்கு" என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.
4. முகச்சுருக்கம் போக்க:
ஆவாரம் பூவை காய வையுங்கள். காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற மாவு)5 கிராம். இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில் சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.
மற்றொரு முறை: வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.
================================================================================
4. உதடு சிவப்பாக
இதழ்களை பராமரிக்க:
- பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். உதடு கருமையாக இருப்பவர்கள், கசகசாப் பாலை உதட்டின் மீது தடவி வர, உதட்டிற்கு நல்ல நிறம் கிடைக்கும்.
- நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும். உங்களுக்கு இயற்கை கொவ்வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும்.
- பலரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையான செந்நெறி உதடுகளைப் பெறலாம்.
- சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும்.இது முக அழகை கெடுத்து விடும்.அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...
- வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
- சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
- ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
- கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்
3. சருமம் மென்மையாக
* ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.
- வெந்தயப் பொடியை வெண்ணெயில் குழைத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வறண்ட சருமம் அழகாக மாறும்
- குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும்.
- இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய் உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.
- எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால் சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம்.
- வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்
- மஞ்சள்தூள், சந்தனத்தூள், ஆலிவ் எண்ணை கலவையை உடல் முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிக்க வேண்டும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்து வர சருமம் மென்மை பெறும்.
- பாலும், எலுமிச்சைபழச் சாறும் கலந்த கலலையை முகத்தில் பூசி, இயற்கையான முறையில் `பிளீச்' செய்யலாம்.
4. கழுத்தை பராமரிக்க
- நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.
- சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.
================================================================================
5. நகத்தைப் பராமரிக்க:
பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
5. நகத்தைப் பராமரிக்க:
பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
============================================================
6. அழகான பாதத்திற்கு
- தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.
- இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
- பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். நகத்துக்கு டார்க் கலர் பொலிஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பொலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பொலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
- கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். .
No comments:
Post a Comment