Friday, 27 February 2015





அவல் பீட்ரூட் சாலட்


beetroot salad raw க்கான பட முடிவுதேவையான பொருட்கள் 


அவல் : 1/4 கப் , (மெல்லிய அவல்),       பீட்ரூட்: 1 (சிறியது ),  
தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்,                  நாட்டுசர்க்கரை : 3 ஸ்பூன் 
உப்பு சிறிதளவு .




செய்முறை:


முதலில் அவலை தண்ணீரில் போட்டு  அலசி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதனுடன் பீட்ருட்டை துருவி சேர்த்து கரண்டியால் கிளறவும்.அதனுடன் துருவிய தேங்காய்,   நாட்டுசர்க்கரை, உப்பு சிறிது சேர்த்து கிளறவும். அவல் பீட்ரூட் சாலட் தயார்.

நாட்டுசர்க்கரைக்குப் பதிலாக குண்டு வெல்லம், பணங்கருப்பட்டி பயன்படுத்தலாம்.

  • இரத்தசோகை உள்ளவர்கள் தினசரி பீட்ரூட் சாப்பிட்டலாம்.
  • கர்ப்பிணிகள்  தினசரி பீட்ரூட் சாப்பிட்டால் இரத்தசோகை வராமல் இருக்கும்.

  


Wednesday, 25 February 2015

தேங்காய் புட்டு 

தேவையான பொருட்கள் 

அரிசி மாவு : 1/4 கப் ,             தேங்காய் துருவல் : 3 ஸ்பூன் , 
நெய் : சிறிதளவு ,                  முந்திரி பருப்பு : 5 - 6 ,
 சர்க்கரை : 3 ஸ்பூன் ,           பால் : தேவையான அளவு,  
ஏலக்காய் பொடி : சிறிதளவு.

coconut puttu recipe க்கான பட முடிவு


செய்முறை :

சர்க்கரையை  மிக்ஸியில் போட்டு   பவுடர் செய்யவும் .

தேங்காய் துருவல் , முந்திரி  இரண்டையும் நெய் விட்டு வறுத்து  மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொடித்த  சர்க்கரை , தேங்காய் துருவல் + முந்திரி பொடித்த கலவை , ஏலக்காய் பொடி அனைத்தையும் சேர்த்து  கலந்து தேவையானால் பால் விட்டு உருண்டை பிடிக்கும் பதத்தில் பிசறிக்கொள்ளவும் . கடைசியாக சிறிது நெய் சேர்த்து கலந்து கொழுக்கட்டை போல பிடித்து கொள்ளவும். 

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடுசெய்து பிடித்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து அதன் மேல் லேசாக நெய் விட்டு  5 நிமிடம் வேகவிடவும். நடுவில் ஒரு முறை உருண்டைகளை ஸ்பூனால் திருப்பிவிடவும். 

கையால் தொட்டுபார்க்கவும்.  ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்.