குளியல் பொடி
இன்று பல சோப்புகளாலும, பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாதாலும் சருமம் வறட்சியடைகின்றது.
சரும பாதிப்புகளுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கின்றது. குளியல் பொடி தயாரிக்க
தேவையான பொருட்கள்...
சோம்பு - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
வெட்டி வேர் - 100 கிராம்
அகில் கட்டை - 100 கிராம்
சந்தனத் தூள் - 150 கிராம்
கார்போக அரிசி - 100 கிராம்
தும்மராஷ்டம் - 100 கிராம்
கோரைக்கிழங்கு - 100 கிராம்
கோஷ்டம் - 100 கிராம்
ஏலரிசி - 100 கிராம்
பாசிப்பயிறு - 250 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் - 200 கிராம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக காய வைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த குளியல் பொடியை தினமும் குளிக்கும் போது தேவையான அளவு எடுத்து நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசி 20 ஊற வைத்து இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால் தேமல், கண்களில் கருவளையம், முகப்பரு, போன்ற பிரச்சனைகள் தீரும். மேலும் உடல் முழுவதும் நறுமணம் வீசத் தொடங்கும்.
இயற்கை ஷாம்பு
இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது.
மேலும் ஷாம்பு, கண்டிஷனரில் உள்ள கெமிக்கல் குப்பைகளை என்ன செய்வது என்பது நம் முடிக்கு தெரிவது இல்லை. முடி வெட்டியபிறகு தலைக்கு குளிக்க வேண்டும் எனில் பின்வரும் இயற்கை ஷாம்புவை பயன்படுத்தலாம்.
1) தண்ணீர்: தலையில் நீரை விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.
2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து கொள்ளுங்கள். இதை தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்புவும் அளிக்க முடியாது.
கண்டிஷனர்
எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள். அல்லது லெமன் ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனராக பயன்படுத்துங்கள். இப்படி வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.
சரும சுருக்கத்தை நீக்க எளிய வழிகள்
பொலிவிழந்த சருமம், சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா?
சரும பிரச்சனைகளைப் போக்குவதற்கு தினமும் பயன்படுத்தும் அழகு பொருட்களை ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், சரும பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.
• சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க புதினாவை பயன்படுத்தால். மேலும் புதினா சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமம் பொலிவாக இருக்க உதவும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும், அவை அனைத்தும் குணமாகிவிடும்.
• சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், சரும வறட்சி ஏற்படும். தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
• பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.
• மஞ்சள் தூள் உடன் சிறிதளவு பாலை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
• மூக்கு மற்றும் தாடையை சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.
• சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
• பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.
ஆயுர்வேத அழகு குறிப்புகள்
- தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
• ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
• முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
• நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
• கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
• வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
• இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
• கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
• இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
• முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
No comments:
Post a Comment